S.Renuka / 2026 ஜனவரி 01 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து சுமார் 314 கோடி ரூபாய்க்கு அதிகமான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியின் கெல்சென்கிர்ச்சன் நகரில், 'ஸ்பார்காஸ்ஸே' என்ற வங்கி செயல்பட்டு வருகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி வங்கிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், வங்கியின் வாகன நிறுத்துமிட பகுதியில் இருந்து பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கும் நிலவறை பகுதி வரை சுவற்றில் கொள்ளையர்கள் துளையிட்டனர்.
உள்ளே புகுந்து, 3,000க்கும் மேற்பட்ட பெட்டகங்களை உடைத்து, சுமார் 314 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், தங்கக்கட்டிகள், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவத்தில் தொழில்முறை கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago