2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

சேவல் ஹோட்டல் கின்னஸ் சாதனை

Editorial   / 2024 நவம்பர் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்று உலகில் இதுவரை கட்டப்பட்ட சேவல் வடிவ கட்டிடங்களில் மிகப்பெரியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு பிலிப்பைன்ஸின் சுற்றுலா நகரமான நீக்ரோஸ் ஆக்சிடென்டல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட சேவல் வடிவ ஹோட்டல் 10 மாடிகளைக் கொண்டதாகவும் 34.93 மீற்றர் உயரமும் 12.12 மீற்றர் அகலமும் கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்த ஹோட்டலில் ஜன்னல் இல்லாத 15 அறைகள் உள்ளதாகவும், அனைத்து அறைகளும் முழுமையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சேவல் வடிவ கட்டிடமாக இது கின்னஸ் உலக சாதனைகளால் செப்டம்பர் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6 மாத காலத்திற்கு திட்டமிடப்பட்ட இந்த ஹோட்டல் நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .