Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்கு சவுதி அரேபியப் பிராந்தியமான நஜ்ரானுடனான எல்லைக்கு அருகில் தாம் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகவும், சவுதி அரேபிய இராணுவ அதிகாரிகள் சிகர் உட்பட ஆயிரக்கணக்கான எதிரிப் படைகளைக் கைப்பற்றியதாக யேமனின் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், சவுதி அரேபியாவிலுள்ள அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தல்களும் காணப்பட்டிருக்கவில்லை.
நஜ்ரான் பகுதியில் 72 மணித்தியாலங்களுக்கு முன் தாம் ஆரம்பித்ததும், தமது குழுவின் ட்ரோன், ஏவுகணை, வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஆதரவளிக்கப்பட்ட தாக்குதலில் மூன்று எதிரி இராணுவ பிரிகேட்டுகள் வீழ்ந்ததாக அறிக்கையொன்றில் ஹூதிகளின் பேச்சாளரொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹூதிகளின் பேச்சாளரை மேற்கோள்காட்டிய ஹூதிகளால் நடாத்தப்படும் அல்மஸிராஹ் தொலைக்காட்சி, சவுதி அரேபிய இராணுவத்தின் பல அதிகாரிகள், படைவீரர்கள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான எதிரிப் படைகளையும், நூற்றுக்கணக்கான கவச வாகனங்களையும் ஹூதிகள் கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், யேமனுக்கெதிரான தனது ஆக்கிரமிப்பை சவுதி அரேபியா தொடர்ந்தால், சவுதி அரேபிய பகுதிகளுக்குள் தாம் மேலும் ஊடுருவ முடியும் என சவுதி அரேபியாவுக்கு குறித்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக ஹூதிகளின் இராணுவப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இராணுவ பிரிகேட்டுக்களின் மீதான தமது கட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பதற்காக ஸ்னைப்பர் சூட்டையும், வேறு உத்திகளையும் கையாண்டதாக ஹூதிகள் தெரிவித்துள்ளார். தவிர, சவுதி வான் தாக்குதல்களிலிருந்து கைப்பற்றப்பட்டவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு வெளிபடுத்தப்படாத இடங்களில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago