Editorial / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவின் முஸ்லிம்களின் புனித நகரான மதீனாவுக்கு அருகில் பஸ்ஸொன்று கனரக வாகனமொன்றுடன் மோதியதில் 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் சவுதி அரேபியாவின் அரச ஊடகமான சவுதி ஊடக முகவரகம் இன்று தெரிவித்துள்ளது.
மேற்கு சவுதி அரேபிய நகரில் தனியார் வாடகை பஸ்ஸொன்றுக்கும் பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனமொன்றுக்குமிடையே நேற்று குறித்த விபத்து இடம்பெற்றதாக மதீனா பொலிஸின் பேச்சாளரொருவர் தெரிவித்ததாக சவுதி ஊடக முகவரகம் கூறியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி அரேபிய, ஆசிய யாத்திரிகர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். பஸ்ஸின் யன்னல்கள் வெடித்த நிலையில் பஸ் தீயால் சூழப்பட்டிருக்கும் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் பிரசுரித்திருந்ன.
அல்-ஹம்னா வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்கள் மாற்றப்பட்டதாக சவுதி ஊடக முகவரகம் மேலும் தெரிவித்துள்ள நிலையில், விசாரணையொன்றை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago