Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

யேமனின் ஒம்ரான் மாகாணத்தில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹூதிகளால் நடாத்தப்படும் அல் மஸிராஹ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து குறித்த குடும்பம் அடைக்கலம் புகுந்த பள்ளிவாசலை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்கியதாக ஹூதிக் குழு இன்று (23) அதிகாலையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் காணவில்லை என அறிக்கை தெரிவிக்கின்ற நிலையில், கட்டட இடிபாடுகளில் மீட்புப் பணியாளர்கள் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவிடமிருந்து உடனடியான உறுதிப்படுத்தல் எவையும் காணப்பட்டிருக்கவில்லை.
தம் மீதான தாக்குதல்களை சவுதி அரேபியா நிறுத்தினால், சவுதி அரேபியா மீது ஏவுகணைகள், ட்ரோன்களால் இலக்கு வைப்பதை தாம் நிறுத்துவோம் என கடந்த வெள்ளிக்கிழமை ஹூதிகள் அறிவித்திருந்ததுடன், தொடர்ச்சியான யுத்தம் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என விமர்சித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .