2025 மே 15, வியாழக்கிழமை

சாக்கலேட் முட்டைகள் திருட்டு

Freelancer   / 2023 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனை சேர்ந்த 32 வயதான ஜாபி புல் என்ற நபர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், பிரபல கேட்பரி சாக்கலேட் நிறுவனத்திற்குள் புகுந்து 2 இலட்சம் சாக்கலேட் முட்டைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. திருடப்பட்ட சாக்லேட் முட்டைகளின் மதிப்பு 4 இலட்சம் ​அமெரிக்க டொலர்கள் ஆகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 220 மில்லியன் சாக்கலேட் முட்டைகளை கேட்பரி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முட்டை போலவே வெள்ளை மற்றும் மஞ்சள் நிற க்ரீம்களில் தயாரிக்கப்படும் இந்த சாக்கலேட் தித்திப்பு சுவை கொண்டதாக இருக்குமாம்.

ஈஸ்டர் பண்டிகை காலத்தில் இந்த சுவை மிகுந்த சாக்கலேட் முட்டைகளை கேட்பரி நிறுவனம் சிறப்பு விற்பனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .