Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
போகோ ஹராமுக்கெதிரான அண்மைய நடவடிக்கையொன்றில் கைது செய்யப்பட்ட போகோ ஹராமின் உறுப்பினர்களெனச் சந்தேகிக்கப்படும் 44 பேர் கொண்ட குழுவொன்று அவர்களின் சிறைச்சாலையறையில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், நஞ்சூட்டப்பட்டது போலத் தோன்றுவதாக சாட்டின் பிரதான அரசாங்க வழக்குத் தொடருநர் யூசுஃப் டொம் நேற்று அறிவித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சியில் பேசும்போது, 44 சிறைக்கைதிகள், அவர்களது சிறைச்சாலையறையில் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக யூசுஃப் டொம் கூறியுள்ளார்.
இறந்த சிறைக்கைதிகள் நால்வரில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், இறந்த சிலரில் மாரடைப்பை ஏற்படுத்திய மற்றும் ஏனையோரில் கடும் மூச்சுத் திணறலை ஏற்படுத்திய பயங்கரமான பதார்த்தத்தின் அடையாளங்கள் காணப்பட்டதாக யூசுஃப் டொம் தெரிவித்துள்ளார்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025