2025 நவம்பர் 05, புதன்கிழமை

’சிரிய அரசாங்கப் படைகளிடம் கான் ஷெய்க்கூனின் முழுக் கட்டுப்பாடு’

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேற்கு சிரிய முக்கிய நகரான கான் ஷெய்க்கூனின் முழுக் கட்டுப்பாட்டை சிரிய அரசாங்கப் படைகள் நேற்றுப்  பெற்றுள்ளதாகவும், அருகிலுள்ள கண்காணிப்பு நிலையமொன்றில் துருக்கிப் படைகளைச் சூழ்ந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கான் ஷெய்க்கூன் நகரத்தின் முழுக் கட்டுப்பாட்டை அரசாங்கப் படைகள் பெற்றுள்ளதாகவும் தற்போது நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் கூறியுள்ளார்.

இதேவேளை, கான் ஷெய்க்கூனுக்கு தெற்கிலிருந்து வட ஹமா மாகாணம் வரையிலான பகுதியொன்றை அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் சூழ்ந்துள்ளதாகவும், அருகிலுள்ள நகரான மொரெக்கிலுள்ள துருக்கியப் படைகளௌக்கான அனைத்து வீதிகளையும் இடைமறித்துள்ளதாகவும் றமி அப்டெல் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய மோதல்களில் 10 அரசாங்க அல்லது அவர்களுக்கு விசுவாசமான போராளிகளுடன், இஸ்லாமிய ஆயுததாரிகள் 18 பேர் உள்ளடங்கலாக அரசாங்கத்துக்கெதிரான போராளிகள் 21 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

ரஷ்ய ஆதரவிலான சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் அரசாங்கத்துக்கான சிரிய எதிரணியின் இறுதிப் பிரதான பலம்வாய்ந்த இடமான துருக்கிய எல்லையுடனுள்ள கான் ஷெய்க்கூனானது, இட்லிப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தும் எதிரணிப் போராளிகள் மற்றும் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கெதிராக கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும் மோதல்களைத் தொடர்ந்தே வீழ்ச்சியடைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X