Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரிய எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதிப் பலம் வாய்ந்த இடத்தின் முக்கிய நகரம் ஒன்றான மாரெட் அல்-நுமானின் புறநகர்களை சிரிய அரசாங்கப் படைகள் அடைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகமும், அரசாங்க சார்புப் பத்திரிகையான அல்-வட்டானும் நேற்றுத் தெரிவித்துள்ளன.
சிரியாவின் முழுக் கட்டுப்பாட்டையும் மீளப்பெற அரசாங்கம் எதிர்பார்க்கையில், சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸையும், இரண்டாவது நகர் அலெப்போவையும் இணைக்கும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட எம்5 நெடுஞ்சாலையிலேயே பெரும்பாலும் வெற்றாகவுள்ள மாரெட் அல்-நுமான் காணப்படுகின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான படைகளின் இறுதிப் பலம்வாய்ந்த இடமான மூன்று மில்லியன் பேரைக் கொண்டிருக்கின்ற வடமேற்கு மாகாணமான இட்லிப்பின் மிகப்பெரிய நகர் மய்யமொன்றே மாரெட் அல்-நுமான் ஆகும். குறித்த மூன்று மில்லியன் பேரில் அரைவாசிப்பேர் ஏனைய பகுதிகளின் வன்முறையால் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
இஸ்லாமிய ஆயுததாரிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் இட்லிப் பிராந்தியத்துக்கெதிரான குண்டுத்தாக்குதல்களை கடந்த மாதம் முதல் அரசாங்கமும், அதன் நட்புறவு நாடான ரஷ்யாவும் அதிகரித்திருந்தன. தென் இட்லிப், அயல் மாகாணமான அலெப்போவுக்கு மேற்காக நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையிலேயே, கடந்த 24 மணித்தியாலங்களில் மாரெட் அல்-நுமானின் புறநகர்களிலுள்ள ஏழு கிராமங்களை அரசாங்க தரைப் படைகள் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
இட்லிப்பும், அருகிலுள்ள பகுதிகளான ஹமா, அலெப்போ, லடாக்கியா ஆகியவை அல்-கொய்தாவின் முன்னாள் சிரியக் கிளையின் உறுப்பினர்களால் தலைமை தாங்கப்படும் ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் இஸ்லாமியக் குழுவால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025