2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களுக்கு சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

Freelancer   / 2025 ஜூன் 12 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்சில்,  வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணங்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என, அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

“பிரான்சில் சிறுவர்கள் அலைபேசியில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். 

“சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும் நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் கெட்டு சீரழிவது கண்கூடாக தெரிகிறது. 

“இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்" என்றார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X