2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறைச்சாலையில் இருந்து 6,000 கைதிகள் தப்பியோட்டம்

Freelancer   / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளர்ச்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6,000 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. 

இதற்கிடையே, கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

 இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் சுமார் 6,000 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X