2025 மே 15, வியாழக்கிழமை

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இருவர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சீனப் பெருஞ்சுவர் பார்வையிடுவதற்கு  ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்படுகிறது. விசாரணையில், இதனை  சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுபற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அப்பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர். இதில், ஓட்டை போட்டுள்ளனர் என்றும் பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுவரின் குறிப்பிட்ட பகுதியின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் இருவரிடமும் பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .