Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சீனாவில் நிரம்பிக் காணப்பட்ட பஸ்ஸொன்றும், ட்ரக்கொன்றுக்குமிடையிலான மோதலைத் தொடர்ந்து குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டதுடன், 36 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று பயணிகளைக் கொண்டிருந்த சரக்கு ட்ரக்கொன்றுடன் சங்சுன்-ஷென்ஸன் நெடுஞ்சாலையின் எதிர்த்தரப்பில் வந்த பஸ் இன்று மோதியதாக ஜியாங்சு மாகாணத்தின் யிக்ஸிங்ஸிலுள்ள பொலிஸார் கூறியுள்ளனர்.
பஸ்ஸின் இடது முன்பக்கச் சில்லின் டயரொன்றில் காற்று இல்லாமை காரணமாகவே விபத்து இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையொன்று வெளிப்படுத்துவதாக யிக்ஸிங் பொதுப் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
மோசமாகக் காயமடைந்த ஒன்பது பேர் உள்ளடங்கலாக 36 பேர் காயமடைந்திருந்த நிலையில், ஒருவர் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
சங்சுன்-ஷென்சன் நெடுஞ்சாலையானது எட்டு மணித்தியாலங்களாக மீட்புப் பணி இடம்பெற்றதைத் தொடர்ந்து மீளத் திறக்கப்பட்டிருந்தது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025