2025 ஜூலை 12, சனிக்கிழமை

சீனாவை புரட்டி போட்ட புயல்

Freelancer   / 2023 ஜூலை 31 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளை புரட்டி போட்ட டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸை தாக்கிய டொக்சூரி புயலின் போது பலத்த காற்று வீசியதால் வீடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை பிடுங்கி வீசப்பட்டன. தொடர்ந்து, தென்கிழக்கு சீனாவை டொக்சூரி புயல் தாக்கியது.

கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து முடங்கிய நிலையில், ஃபுஜியான் மற்றும் குவாங்ஷோ மாகாணங்களை சேர்ந்த சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .