2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சீனா மீது புதிதாக 50% வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவானது தமது புதிய 34 சதவீத பதிலடி வரியை வாபஸ் பெறாவிட்டால், ஐக்கிய அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலதிகமாக 50 சதவீதம் வரியை விதிப்பேன் என சீனாவை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

சீன இறக்குமதிகள் மீது 34 சதவீத வரிகளை விதிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு பதிலாகவே சீனா வரிவிதிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இன்றைக்குள் பதிலடி வரியை நீக்குமாறும் அல்லது 50 சதவீத வரியை எதிர்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

அவ்வாறு விதிக்கப்பட்டால் சீன இறக்குமதிகளுக்கு ஐக்கிய அமெரிக்க நிறுவனங்கள் மொத்தமாக 104 சதவீத வரியை செலுத்த வேண்டியேற்படும். ஏனெனில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 34 சதவீதத்துக்கு மேலதிகமாக 20 சதவீதம் கடந்த மாதம் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X