2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

செங்கடலில் பதற்றம்; கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த நன்மை

Freelancer   / 2024 ஜனவரி 17 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கைகள் வந்துகொண்டு இருக்கின்றன.

எனினும், இதன்மூலம் இலங்கைக்கு ஒரு நன்மை கிடைத்துள்ளது என்றே கூறலாம். 

அதாவது, தெற்கு செங்கடலில் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கப்பல்கள் வசதியான போக்குவரத்துப் புள்ளியாக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை கண்டறிந்ததால், சமீபத்திய வாரங்களில் இலங்கைக்கு வரும் கொள்கலன் அளவுகளில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நவம்பர் முதல் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியுள்ளனர், இது உலகின் கப்பல் போக்குவரத்தில் சுமார் 12% பகுதி ஆகும்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சில கப்பல் நிறுவனங்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவின் ‘கேப் ஆஃப் குட் ஹோப்’-ஐச் சுற்றிகொண்டு ஒரு நீண்ட பாதையில் செல்கின்றன.

இதனால் பயணம் சுமார் 10 நாட்கள் நீளும். இதற்கு பல மில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவாகும்.

“கப்பல்கள் தென்னாப்பிரிக்காவைக் கடந்து வரும்போது, அவர்கள் சந்திக்கும் முதல் மையம் கொழும்புதான்... சிங்கப்பூர் தொலைவில் உள்ளது. எனவே அணுகுவதற்கு இதுவே எளிதான துறைமுகம்” என வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகம் மூலோபாய இடம் காரணமாக உள்ளதால், மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு கப்பல்களுக்கு வசதியான அணுகலை இது வழங்குகிறதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) மூத்த அதிகாரி லால் வீரசிங்க தெரிவித்தார்.

மேலும், கொழும்பு துறைமுகமானது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய துறைமுகமாகும் என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X