2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

செல்லப் பிராணிகளுக்கு ஆடம்பரத் திருமணம்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியானாவில் குருகிராம் நகரில் ,அண்டை வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா.

மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்ற ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகின்றார்.

அதேபோல்  சவிதாவும்   ஸ்வீட்டி என்ற பெண் நாயை நீண்டகாலமாக வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதன்படி, சுமார் 100 பேருக்கு செல்லப் பிராணிகளின்  திருமணத்திற்கு வருமாறு  அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக 25 திருமண பத்திரிகைகளை அச்சிட்டுள்ளதோடு ஏனையவர்களை ஒன்லை வழியே அழைத்துள்ளனர்.

இதனையடுத்து  குறித்த திருமணமானது அண்மையில்  கோலாகலமாக நடைபெற்றுள்ளதோடு, இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து சவிதா கூறும்போது ” நானும் எனது கணவரும்  செல்லப்  பிராணிகள் வளர்ப்பதில் மிகவும்  விரும்பம் உள்ளவர்கள்

எங்களுக்கு  குழந்தை இல்லை. அதனால், ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வருகிறோம்.

எனவே ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து பார்க்க விரும்பினோம் என்றார்.

இத் திருமணத்தின்போது கொட்டு மேளங்களும் முழங்க, பாரம்பரிய முறைப்படி நாய்களுக்கு மாலை அணிவித்து, சடங்குகள் நடத்தப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X