2025 மே 14, புதன்கிழமை

சோனியா காந்தி வைத்தியசாலையில்

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மும்பை நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தில்லி திரும்பிய சோனியா காந்திக்குதிடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் இருந்ததால் அவா் சனிக்கிழமை(02) மாலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற பரிந்துரைத்தனா். இதையடுத்து, அவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.

சோனியா காந்தியின் உடல்நிலை தொடா்பாக மூத்த மருத்துவா் ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் உள்ளது. இப்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. மருத்துவக் குழுவினா் அவரது உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .