Freelancer / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025