2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

ஜப்பானில் ஒன்றன் பின் ஒன்றாக 50 வாகங்கள் மோதல்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஜப்பானிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் ஒன்றன் பின் ஒன்றாக குறைந்தது 50 வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ட்ரக்குகளுக்கிடையிலான மோதலாலேயே சங்கிலி போன்ற இச்சம்பவம் இடம்பெற்றதுடன் குறைந்தது 10 வாகனங்கள் தீப்பிடித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்றபோது கடும் பனிக்கான எச்சரிக்கை காணப்பட்டுள்ளது. பனிமேற்பரப்புகள் காரணமாக வீதிகளில் ட்ரக்கள் சறுக்கியிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (26) இரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X