Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஜோர்ஜ் பிளாய்ட்‘ என்ற கறுப்பினத்தவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் ,அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் இனவெறிக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதேசமயம் ‘ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்குக் காரணமாக இருந்த 4 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முக்கிய குற்றவாளி ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் மற்றொரு பொலிஸார் அதிகாரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் “இக் கொலையில் பங்கு வகித்த குற்றத்திற்காக அலெக்சாண்டர் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
54 minute ago