2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

ட்ரம்புடன் மோடி சந்திப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை, பெப்ரவரி 14ஆம் திகதி, இந்தியபிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார்

கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இதையடுத்து,ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்'' என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 10, 11ஆம் திகதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

அங்கிருந்து வரும் 12ஆம் திகதி அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வரும் 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அன்றிரவு ட்ரம்ப் சார்பில் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. வரும் 14ஆம் திகதி அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். 

கடந்த மாதம் 20ஆம் திகதி பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் சந்திக்க உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X