Freelancer / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகாலமாக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ ஆகியோரின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு, எதிர்பாராத விதமாக மிகவும் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
இரு தலைவர்களும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பதாலும், கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் கொலம்பியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்ததாலும் இச்சந்திப்பு பெரும் பதற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த சுமார் இரண்டு மணிநேர உரையாடல் மிகவும் நேர்மறையாக அமைந்துள்ளது.
சந்திப்பிற்குப் பிறகு ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், பெட்ரோ ஒரு அற்புதமான மனிதர் என்றும், தங்களுக்குள் ஒரு நல்ல சந்திப்பு நடந்ததாகவும் புகழாரம் சூட்டினார்.
இது சில வாரங்களுக்கு முன்பு அவரை கொடூரமானவர் என விமர்சித்ததற்கு நேர்மாறாக அமைந்துள்ளது.(a)

4 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Feb 2026