2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு அழைப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க பல்கலைக்கழங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று, அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X