2025 மே 15, வியாழக்கிழமை

டிரோன் தாக்குதலில் 40 பேர் பலி

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கில் படுகாயம் அடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டோமில் ராணுவத்தினர் டிரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .