2025 மே 02, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப் - மோடி பெப்ரவரியில் சந்திப்பு?

Freelancer   / 2025 ஜனவரி 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார்” என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

"இன்று (செவ்வாயக்கிழமை -28) காலை, அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பெப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது" என்றும் டிரம்ப் கூறினார்.

முதல் முறை ஜனாதிபதியாக பதவி வகித்த போது, டொனால்ட் ட்ரம்ப் கடைசியாக இந்தியாவுக்கு தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ட்ரம்ப் மற்றும்  மோடி ஆகியோருக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இருவரும் 2019 செப்டெம்பரில் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகள் மற்றும் 2020 பெப்ரவரியில் அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றினர்.

2024 நவம்பர் மாதம் ஜனாதிபித தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .