2025 மே 15, வியாழக்கிழமை

தகாத உறவு: சபாநாயகரும் எம்.பியும் இராஜினாமா

Editorial   / 2023 ஜூலை 18 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகாத உறவு காரணமாக பாராளுமன்றத்தின் சபாநாயகரும், அந்த பாராளுமன்றத்தின் பெண் எம்.பியும் இராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் சிங்கபூரில் இடம்பெற்றுள்ளது.

 சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார்.

டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .