Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணு ஆயுத தாக்குதல் நடைபெறும் போது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அண்மையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் , “ஒரு அணு ஆயுத குண்டு வெடித்தால், அதிலிருந்து கதிரியக்க தூசிகள் மேகங்களை போல காற்றில் பல தூரம் பரவுகின்றது. இந்த கதிரியக்க துகள்கள் உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். இந்த கதிர்வீச்சைத் தவிர்க்க மக்கள் செங்கல் அல்லது கான்கிரீட் கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்து கொள்ள வேண்டும். மேலும் மக்கள் தங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்ப்பதோடு, அத்தகைய சமயத்தில்,மக்கள் உடனடியாகக் குளிக்க வேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுளடளது.
அத்துடன் ” கதிர்வீச்சு உடலை தாக்காமல் தடுக்க, உங்கள் தலைமுடியில் கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கண்டிஷனர் உங்கள் தலைமுடிக்கும் கதிரியக்கப் பொருட்களுக்கும் இடையில் ஒரு பசை போல் செயல்படும். அப்போது கதிரியக்க தூசிகள் முடியில் ஒட்டிக்கொள்ளும். முடி இழைகள் நெகட்டிவ் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள், அதேசமயம் கண்டிஷனர்கள் பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட துகள்கள்.
இவை இரண்டும் ஒன்றோடொன்று ஈர்க்கும். அவை கதிரியக்க தூசிக்கு பசையாக செயல்படுகின்றன.
உக்ரேன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று ரஷ்யா மிரட்டியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு இந்த பாதுகாப்பு அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago