Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் காலவரையின்றி இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுட் சான் தொலைக்காட்சி ஒளிபரப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இதுவரை 1,875 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025