2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருநங்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில்  சுமார் 10,418  திருநங்கைகள் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் ” பாகிஸ்தானில்  திருநங்கைகளுக்கு எதிரான இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. 

இதன் காரணமாக அவர்கள் நாளாந்தம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

குறிப்பாக அண்மையில் அடையாளம் தெரியாத நபர்  ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்  3  திருநங்கைகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இம் மாதம் 1 ஆம் திகதி திருநங்கைகள் இருவர்  கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். 

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிகாரிகள் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X