Freelancer / 2025 மார்ச் 24 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில், திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதாவது வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இது குடும்ப சூழலில் வளர்வதற்கான குழந்தைகளின் உரிமையை மறுப்பதாக உள்ளது.
எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் திருமணம் ஆகாதவர்களும் இனிமேல் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.
இதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
19 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
22 minute ago
29 minute ago