2025 மே 09, வெள்ளிக்கிழமை

திருமண நிகழ்வில் தீ : 100ற்கும் மேற்பட்டோர் கருகினர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் நாட்டின் நினேவா மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்ற பகுதியில் பாக்தாத் நகரத்தில் இருந்து சுமார் 335 கிமீ தொலைவில் உள்ள இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். 

இப்பகுதியில் உள்ள அரங்கில் இன்று (27)திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சில நிமிடங்களில்அரங்கு முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த மக்களால் அரங்கிலிருந்து வெளியேற முடியவில்லை. குறித்த  தீவிபத்தில் 100ற்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதோடு150ற்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X