2025 மே 15, வியாழக்கிழமை

துப்பாக்கிச்சூடு வதந்தியால் பதற்றம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க செனட் கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த அழைப்பால்  பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் பொலிஸாரின் 911 என்ற அவசர எண்ணிற்கு திடீரென ஓர் அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் அமெரிக்காவின் செனட் சபை கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக தகவல் கிடைத்தது.


இதையடுத்து,  பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டிட வளாகத்தில் சோதனை நடத்தினர். மேலும் செனட் கட்டடத்திற்குள் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என்று கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து பொலிஸார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும்சிக்கவில்லை. இதையடுத்து அந்த அழைப்பு போலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .