2025 மே 14, புதன்கிழமை

தூதரக தொடர்பை துண்டித்த பொலிவியா

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிவியன் தகவல் முகமை கூறும்போது, பலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து, காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஐ.நா.வுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி, ஐ.நா. சபையில் பேசும்போது, “பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

இதற்கிடையே கொலம்பியா, சிலி ஆகிய நாடுகள் தங்களது இஸ்ரேலுக்கான தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன. இதுதொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சகம் கூறும்போது “காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச்சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கான சிலி தூதர் ஜார்ஜ் கர்வாஜலை சாண்டியாகோவிற்கு திரும்ப அழைக்க சிலி அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X