2025 மே 14, புதன்கிழமை

தெருக்களில் பச்சை நிறத்தில் ஓடிய திரவம்

Freelancer   / 2023 நவம்பர் 08 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயார்க் நகர தெருக்களில் பச்சை நிறத்தில் ஓடிய தண்ணீர் குறித்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. அதில், பச்சை நிறத்தில் திரவம் போன்று தண்ணீர் ஓடுகிறது.

சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக இதுபோன்று பச்சை நிறத்தில் திரவம் தெருவில் ஓடி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளை பார்த்த இணைய பயனர்கள் பலரும், இது வெப்பமயமாக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சில பயனர்கள், இவ்வாறு திரவம் தெருக்களில் ஓடுவது நிலத்தடி நீர் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பது போன்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X