Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சொந்திரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று (01) பிறப்பித்துள்ளார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பாக தமிழிசை கருத்து வெளியிடுகையில், “ஆளுநர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ,
அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர்.
“எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பாரதீய ஜனதா கட்சியின், தலைவராக எனது பதவிக்காலம், டிசெம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கானா மாநிலத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் நிச்சயம் உழைப்பேன். தெலுங்கானாவின் ஆளுநரானாலும் தமிழகத்திற்கு என்றும் நான் சகோதரி தான்” என்றார்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக கடந்த 2014ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 2014ஆம் திகதி நியமிக்கப்பட்ட தமிழிசை, கடந்த 5 வருடங்களாக அந்தப் பதவியில் இருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழிசை, மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, நீட் உள்ளிட்ட நடைமுறைகளின்போது, மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு விளக்கமளித்து வந்திருந்தார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளமை காரணமாக அவர், தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரை நியமிக்கும் வரை, தற்காலிகத் தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025