Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா, தேவைப்பட்டால் இராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு இராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது. கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கியது.
ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் சீன இராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் இராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.
தைவான் நாட்டை எதிர்க்க சீனா இராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த சீன இராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது.
தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் "ஃப்ராக் மேன்" படை வீரர் ஒருவர் கூறுகிறார். ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், இராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், இராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது. தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன இராணுவம் வான்வழி இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago