2025 மே 09, வெள்ளிக்கிழமை

தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜோ பைடன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (26) கலந்து கொண்டார். 

ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் பெற்றுள்ளார்.

ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். 

போராட்டத்தில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்,'தொழிலாளர்கள் தற்போது வாங்குவதை விட அதிக சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X