Mayu / 2024 ஜூலை 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டன் பாராளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை உள்ளது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்த ரிஷி சுனக் வியாழக்கிழமை (04) பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த மே மாதம் அறிவித்தார்.
அதன்படி 650 இடங்களை கொண்ட பாராளுமன்ற மக்களவைக்கான (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) தேர்தல் வியாழக்கிழமை (04) நடந்தது. வாக்களிக்க தகுதி உடைய சுமார் 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதற்கமையஇ பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாக முன்னெடுக்ப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு படு தோல்வியே கிடைக்கும் எனக் கூறின. வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அதையே காட்ட தொடங்கியிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.தோல்விக்கு தானே முழு பொறுப்பு ஏற்பதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago