2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடுவானில் குலுங்கிய விமானத்தால் 40 பயணிகள் காயம்

Freelancer   / 2024 ஜூலை 02 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும், விமானம் வானில் குலுங்கிய போது அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்ட நிலையில், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போல கடந்த மே மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றும் நடுவானில் குலுங்கியது. அதில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X