Editorial / 2026 ஜனவரி 02 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்விட்சர்லாந்து நாட்டில் பிரபல ரிசார்ட்டில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டம் பெரும் துக்கமாக மாறியுள்ளது.
கடுமையான தீ விபத்து ஏற்பட்டு 47 மக்கள் உயிரிழந்தனர். சுமார் 115க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தப்பித்த மக்கள், அங்கு கோரத்தை பற்றி பகிர்ந்துள்ள தகவல்கள் பதைபதைக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் 2026 புத்தாண்டை வரவேற்று கொண்டிருந்தன. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள பாரில் நள்ளிரவு பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் நாளே அந்த நாட்டின் கறுப்பு நாளாக அமைந்துவிட்டது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் வலைஸ் கான்டன் பகுதியில் உள்ள ஆல்பைன் ரிசார்ட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு மது, உணவு, ஆடல், பாடல் என்று பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உற்சாக மிகுதியில் இருந்தபோதுதான் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தற்போதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஸ்விட்சர்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மக்களுக்கு 5 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஸ்விட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அண்டை நாடுகளும் ஸ்விட்சர்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
சிறிது நேரத்தில் சீலிங் முழுவதும் தீப்பற்றி, வேகமாக பரவியது. இதில் முதல் தளத்திலும் தீ பற்றியது. வெளியேறும் வழி, படிக்கட்டு ஆகியவை மிகவும் குறுகலாக இருந்தது. அடர்த்தியான புகை இருந்ததால் அங்கிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருந்தது. சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. சிலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினோம். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை." என்றனர்.
அந்த பாருக்கு வெளியே இருந்தவர்கள், "இந்த சம்பவம் ஹாரர் படத்தை விட கொடுமையாக இருந்தது. கடுமையான தீ மற்றும் புகை பரவியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியேறினார்கள்." என்று கூறியுள்ளனர். இந்த தீ விபத்தின் வீடியோக்களும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago