Editorial / 2026 ஜனவரி 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் போது, மச்சாடோ தனது நோபல் பதக்கத்தை ட்ரம்ப்பிடம் ஒப்படைத்தார். இதனை “பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம்” என ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
வெனிசூலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இப்பரிசு வழங்கப்படுவதாக மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago