Editorial / 2025 நவம்பர் 05 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர்.
மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயோர்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் மம்தானியே வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் டிரம்ப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நியூயோர்க் மேயராக மம்தானி தேர்வு பெற்றால் அங்கு பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி விடும். இதனால் நியூயோர்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லிம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றுள்ளார். மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், மம்தானி நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராகாவும், தலைமுறைகளில் அதன் இளைய மேயராகவும் ஆனார்.
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago