2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நாய்க்கு குரங்கம்மைத் தொற்று

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாயொன்று தனது உரிமையாளரிடமிருந்து குரங்கம்மை வைரஸைப் பெற்றமையைத் தொடர்ந்து குரங்கம்மைத் தொற்றுக்குள்ளானதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பம் இதுவே முதற்தடவை என்பதுடன், தொற்றுக்குள்ளானபோது செல்லப்பிராணிகளிடமிருந்து தனித்திருப்பது முக்கியமானது என சுகாதாரத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தவிர, ஏனைய விலங்குகளுக்கு தொற்றும் அபாயத்தைக் குறைப்பதற்காக குப்பையை கவனமாக அகற்ற வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாய்கள் ஏனைய நாய்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ நோயைப் பரப்பும் என எவ்வித ஆதாரமுமில்லை என நிபுணரொருவர் கூறியுள்ளார்.

தோலுடனான தொடர்பு, தொற்றுக்குள்ளானவர்களின் ஆடைகளிலிருந்தே குரங்கம்மை பரவுகிறது.

உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 350,000 தொற்றுக்குள்ளானதுடன், 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X