2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

நிபா வைரஸ் பரவல்: மியன்மாரில் தீவிர கண்காணிப்பு

Freelancer   / 2026 ஜனவரி 28 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்காணிப்புப் பணிகளை அந்நாட்டு சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.
 
இதன்படி இது தொடர்பான விசேட சுகாதார ஆலோசனைகளையும் நேற்று வெளியிட்டது.

 நிபா வைரஸைப் பரப்பும் முக்கிய காரணியான பழம் தின்னும் வௌவால்கள் மியன்மாரில் அதிகளவில் காணப்படுகின்றன.
 
நிபா வைரஸ் பாதிப்பு அடிக்கடி பதிவாகும் நாடுகளுடன் மியன்மார் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், வைரஸ் ஊடுருவும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகின்றது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X