Freelancer / 2026 ஜனவரி 01 , மு.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது.
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.
கடிதங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நாடு முழுவதும் இந்த சேவையைத் தொடர்வது நிதி ரீதியாக நட்டத்தை ஏற்படுத்துவதாக PostNord தெரிவித்துள்ளது.
டென்மார்க் முழுவதும் உள்ள சுமார் 1,500 புகழ்பெற்ற சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படவுள்ளன. இதில் சில பெட்டிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடிதங்களுக்குப் பதிலாக, ஒன்லைன் வர்த்தகம் காரணமாக அதிகரித்து வரும் பொதிகள் விநியோகத்தில் மட்டும் இனி PostNord கவனம் செலுத்தும்.
இன்று முதல், அத்தியாவசிய கடிதங்களை அனுப்ப விரும்பும் மக்கள் தனியார் நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago