2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுளம்பு வலைகளால் இணையும் இந்தியா-பாகிஸ்தான்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவிடமிருந்து 60 லட்சம் நுளம்பு வலைகளைக்  கொள்வனவு செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் சிக்கி  1,700க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்நிலையில், இவ் அனர்த்தங்களால் மலேரியா போன்ற நோய் பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக உலகச் சுகாதார  ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்தவகையில் இந்தியாவிடம் நுளம்பு வலைகளை வாங்கி பாகிஸ்தானுக்கு அனுப்பும் பணியை உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X