2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நோபல் பெற்றவரை அழைக்கும் பங்களாதேஷ் மாணவர்கள்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் எழுத்தாளரும், நோபல் அமைதிப் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று பங்களாதேஷ் மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இராணுவம் தலையிட வேறு வழியின்றி பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து தப்பி, இந்தியா சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும், கிராமிய வங்கி தொடங்கியவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

பங்களாதேஷில் ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் எழுத்தாளர் முகமது யூனுஸ் (84). அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர்.அந்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை இவரே அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர் இயக்க பிரதிநிதிகள் நஹித் இஸ்லாம், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜூம்தார் வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X