Editorial / 2021 நவம்பர் 25 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்):
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஓஃப் பாகிஸ்தான் (SBP) மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு எதிராக சுமார் 74 பில்லியன் ரூபாய் மதிப்பிலான வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோதமான நடவடிக்கை மற்றும் வெளிநாட்டு நாணயக் கணக்கை சட்டவிரோதமாக ரூபா கணக்காக மாற்றியமை தொடர்பாக மத்திய வங்கிக்கு எதிராக எனர்ஜி குளோபல் இன்டர்நேஷனல் (FZE) நஷ்டஈட்டு வழக்கை தாக்கல் செய்தது என்று எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகைச் செய்தியின்படி தெரிகிறது.
நிதியை விடுவிக்காததற்காக, சிந்து உயர்நீதிமன்றத்தில் (SHC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனியார் வர்த்தக வங்கியும் பங்கு கொண்டுள்ளதாக நீதிமன்ற விண்ணப்பத்தின்படி தெரிவதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஓஃப் பாகிஸ்தான், மற்றும் பேங்க் இஸ்லாமியின் பிரதிநிதிகளை நஷ்டஈட்டு கோரிக்கைக்கு பதிலளிக்க அடுத்த ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி நீதிமன்றத்தின் மேலதிக பதிவாளர் முன் ஆஜராகுமாறு சிந்து உயர்நீதிமன்றம் (SBP) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் தடைகளை பாகிஸ்தான் சட்டங்கள் ஏற்கவில்லை என்ற நிலைமையில் அமெரிக்கா மேற்படி நிறுவனம் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அதாவது 2012 டிசம்பரில் மத்திய வங்கி, இந் நிறுவனத்தின் கணக்குகளை முடக்கியது.
ஸ்டேட் பேங்க் ஓஃப் பாகிஸ்தானின் நடவடிக்கை இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றத் தாக்கல் தெரிவிக்கிறது. வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு முன்பு அதுபற்றி நிறுவனத்துக்கு ஒருபோதும் அறிவிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனர்ஜி குளோபல் நிறுவனம் தமது வங்கிக் கணக்குகளை முடக்கியமை மற்றும் ரூபாய் கணக்குகளாக மாற்றியமை ஆகிய மத்திய வங்கியின் செயற்பாட்டை சட்டவிரோதமானவை என அறிவிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.
வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ள நிலுவைத் தொகையை விடுவிக்குமாறும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனர்ஜி குளோபல் நிறுவனம் தமது பணத்தை பயன்படுத்தவும் இலாபத்தை மாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பரிலும் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியிலும் எஸ்பிபி ஆளுநருக்குக் கடிதம் எழுதியதாக பத்திரிகைச்செய்தியின்படி தெரிகிறது.(ஏஎன்ஐ) 10 minute ago
42 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
54 minute ago