Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால், திருப்பதியில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும், இலங்கையைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளும் கடந்த வியாழக்கிழமை ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொலிஸார் முக்கிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உள்ளிட்டவற்றுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதனால் காணிப்பாக்கம் விநாயகர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் படை, வெடிகுண்டு அகற்றும் படை உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
அதேபோல் திருப்பதி கோவிலை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பொலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .